இந்தியா

ரயிலில் இனிமேல் இதை செய்தால் அபராதம்.. ரயில்வே துறை அதிரடி..

Published

on

ரயில் பயணத்தில் பலரும் சத்தமாக பேசிக்கொண்டே வருவதும், மற்றவர்களுக்கு இடையூறு செய்யும்படி சத்தமாக பாடல்களை கேட்டுகொண்டு வருவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இது மற்ற பயணிகளுக்கு அசவகரியமாக இருக்கும் என அவர்கள் நினைத்து பார்ப்பது இல்லை.

இந்நிலையில், ரயிலுக்குள் சத்தமாக பாட்டு கேட்பதற்கும், செல்போனில் சத்தமாக பேசுவதற்கும் மத்திய ரயிவ்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி அப்படி நடந்து கொண்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பயணி தனக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீசார் ஆகியோர் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய விடக்கூடாது எனவும் ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version