டிவி

ஆரியை வாய் திறக்கவிடாத பாலாஜி.. ஹீரோவா? வில்லனா?

Published

on

இன்றைய முதல் பிக்பாஸ் ப்ரோமோவின் தொடர்ச்சியாக இரண்டாவது ப்ரோமோவில், பாலாஜி ஹீரோவாக மாறியுள்ளார்.

போன் டாஸ்க் முடிந்து வெளியில் வந்த ஆரி, சனம் மற்றும் ஆஜித்திடன் பேசும் போது, “அவன் கருத்து மட்டும் வரனும், அது எனக்கு எதிராக இருக்கனும் அவ்வளவுதான், அதற்காகத்தான் இப்படிச் செய்துள்ளார். நீங்க நான் சொன்னது தப்பு என்று நினைத்துக்கொள்ளலாம், நான் நீங்கச் சொன்னது தப்பு என நினைத்துக்கொள்ளலாம்” என்று கூறுகின்றார்.

உள்ளே படுக்கை அறையில் பாலாஜியிடம் பேசும் நிஷா, அவர் சொல்வதைக் கேட்டு இருக்கலாமோ என்பது எங்களது பார்வை என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பாலாஜி காசன்ப்ட் அவ்வளவுதான். எதற்காக கத்திக்கொண்டாக, இந்த தவறான புரிதல் எல்லாம் இருந்துள்ளது. இதற்கு மேல நான் குரலை உயர்த்திப் பேச கூட விருப்பப்படவில்லை என்று கூறிவிட்டு ஹீரோ போல வெளியேறுகிறார்.

பொதுவாக இந்த டாஸ்கில் இரு போட்டியாளர்கள் பேசி முடித்துவிட்டு வெளியில் வந்த உடன் இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பிக்கும். அதை காலர் அல்லது பிற போட்டியாளர்கள் செய்வார்கள். இந்த முறை பாலாஜி மட்டுமே பேசியதால், ஆரிதான் சண்டைக்கு வர வேண்டும். ஆனால் இருவரும் சண்டை போடாமல் பார்த்தாலும் ஒதுங்கிச் செல்வார்கள் போல உள்ளது.

எது எப்படியோ இன்றைய முதல் இரண்டு ப்ரோமோவை பார்க்கும் போது பிக்பாஸ் வீட்டில் புதிதாக ஒரு பிரச்சனை வருகிறது. அது சண்டையாக உருவெடுக்குமா இல்லை புஸ்வானமாக போய்விடுமோ என்று காத்திருந்து பார்ப்போம். ஆக மொத்தம் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குக் கால் செய்து தன் புகாரை மட்டும் தெரிவித்துவிட்டு, அதற்கான விளகத்தை பெறாமலே விட்டுவிட்டார். கண்டிப்பாக இந்த விளக்கத்தைச் சனிக்கிழமை கமல் கேட்பார் என்று எதிர்பார்க்கலாம்.

பாலாஜி ஆரியை வில்லனாக காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்துள்ளார். ஒருவேலை இதுவும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் எதிராக பாலாஜி செயல்பட்டார் என்று மதிப்பெண் பிடுங்கப்படுமா? உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

seithichurul

Trending

Exit mobile version