சினிமா செய்திகள்

தெய்வத் திருமகள் பேபி சாராவா இது?

Published

on

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடிப்பில் வெளியான தெய்வத் திருமகள் படத்தில், விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த பேபி சாரா, தற்போது கிடுகிடுவென வளர்ந்து இளம்பெண் சாராவாக மாறியுள்ளார்.

சமீபத்தில் விக்ரமுடன் சாரா எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தந்தையுடன் மகள் என்ற கேப்ஷனுடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

2005ம் ஆண்டு பிறந்த சாராவுக்கு தற்போது 14வயது ஆகிறது. 2011ம் ஆண்டில் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விடுவார் என்றே தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version