சினிமா

அமிதாப் பச்சனுக்கு பாபா சாகேப் விருது… செய்தி சுருள் சார்பாக ஒரு வாழ்த்து…

Published

on

இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நடிகர், ரஜினிக்கு சூப்பார் பட்டம் கிடைக்கக் காரணமாக இருந்த உண்மையான சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவி்க்கப்பட்டுள்ளது. சினிமாவில் மிக உயரிய விருதான இது 1969ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சத்யசித்ரே, ராஜ்கபூர் உள்ளிட்டோரும் தமிழில் சிவாஜி கணேசனும் வாங்கியுள்ளனர்.

அமிதாப் 84லில் பத்ம ஸ்ரீ, 2001ல் பத்ம பூசன், 2015ல் பத்ம விபூசன் விருதுகளை வாங்கியுள்ளார். தற்போது அவருக்கு பாபா சாகேப் பால்கே விருது கொடுத்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.

இதை மத்திய தகவல் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதுவும் எந்தப் போட்டியும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிச்சயமாக பாபா சாகேப் பால்கே விருது அமிதாபுக்கு என்றால் மர்லின் பிராண்டோவும் வழிவிட்டு ஒதுங்கித்தான் நிற்பார். ரஜினியை வளர்த்த அவர் தற்போது அஜித்தையும் வளர்த்துவிட தொடங்கிவிட்டார் இல்லையா…

மத்திய அரசு விருதுகள் தவிர்த்து இதுவரை 3 முறை தேசிய விருது, பத்துக்கும் மேற்பட்ட ஃபில்ம் பேர் விருது, பல்வேறு உலக விருதுகளையும் பெற்றுள்ளார். உண்மையில் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நடிகர் அமிதாப் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை…

ரஜினி காந்த, கமலஹாசன், ஸ்டாலின், மோடி, அமித் ஷா என அனைத்து துறையினரும் அமிதாபுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். நாமும் நம் பங்கிற்கு ஒரு வாழ்த்தைச்சொல்லி வைப்போம். வாழ்த்துகள் அமிதாப்…

 

seithichurul

Trending

Exit mobile version