டிவி

நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

Published

on

விஜய் டிவியில் தற்போது அதிக பார்வையாளர்களைப் பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி.

கணவன், மனைவி, மாமா, மாமியார் என இருக்கும் மருமகளின் கனவு மற்றும் அவர்களது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் என பலரது குடும்பத்தில் நடக்கும் அன்றாடம் நடக்கும் பல பிரச்சனைகளைச் சுற்றி நடக்கும் சீரியலாக பாக்கியலட்சுமி உள்ளது.

எனவே ரசிகர்கள் மத்தியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெரும் வரவேற்பும் பெற்றுள்ளது. இந்த சீரியலின் பிரதான கதாபாத்திரமான பாக்கியலட்சுமியின் மகன் செழியனுக்கு மனைவியாக வருபவர் ஜென்னி (திவ்யா கணேஷ்).

தனது மாமியாரின் கனவுக்கு ஆதரவாக இவர் பேசும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இவருக்கு என்றும் ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியும் வருகிறது.

இந்நிலையில் இவரது சமூக வலைத்தள பக்கத்தில் இவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

திவ்யா கணேஷ் சன் டிவியில் ஒளிபரப்பான சுமங்கலி, லக்‌ஷ்மி வந்தாச்சு, கிராமத்தில் ஒருநாள் உள்ளிட்ட சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சியில் 4 வருடங்களாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version