சினிமா செய்திகள்
அடிதடியில் முடிந்த டாஸ்க்.. மயங்கி விழுந்த அசீம்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?
பிக்பாஸ் வீட்டில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே சண்டை நடந்துள்ள நிலையில் அடுத்ததாக அசீம் திடீரென மயங்கி விழுந்த காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்பதும் இதில் போட்டியாளர்கள் ஆவேசமாக விளையாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரமோ வீடியோவில் அசீம் மற்றும் அமுதவாணன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட அடிதடியில் இறங்கும் அளவுக்கு ஆவேசமாக நடந்து கொண்டனர் என்பதும் அசீம் அமுதவாணனை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Oh my gosh this is too bad
This man suffers a lot????#biggbosstamil #Azeem #biggboss6 pic.twitter.com/b9oaMtbtuZ— thamee_thammu (@thamee_thammu) November 30, 2022
இந்த நிலையில் அசீம் அளவுக்கு அதிகமாக முரட்டுத்தனமாக விளையாடுகிறார் என்றும் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த வீடியோ வெளியான நிலையில் அதில் அசீம் திடீரென மயங்கி விழுந்ததாகவும் அதனை அடுத்து அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை மெடிக்கல் அறைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும் உள்ளன.
இதனை அடுத்து இன்னொரு வீடியோவில் அசீம்க்கு மைனா அறிவுரை சொல்வது போன்ற காட்சிகளும் ஒருவரை கன்னத்தில் அடிப்பது என்பது அத்துமீறிய செயல் என்று கூறும் காட்சிகளும் உள்ளன. ஆனால் அசீம் தான் யாரையும் அடிக்கவில்லை என்று ஒரேயடியாக சாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day53 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/rTx0vsT4Ff
— Vijay Television (@vijaytelevision) December 1, 2022
இதுவரை இல்லாத அளவில் அசீம் மிகவும் அநாகரிகமாக முரட்டுத்தனமாகவும் விளையாடுகிறார் என்றும் கமல்ஹாசன் இருமுறை அவரை நேரடியாக கண்டித்தும் அவர் திருந்தவில்லை என்றும் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். வரும் சனி ஞாயிறு கிழமைகளில் இது குறித்த பிரச்சினையை கமல்ஹாசன் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.