வீடியோ

விஷாலின் அயோக்யா டீஸர் ரிலீஸ்!

Published

on

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா டீஸர் தற்போது வெளியிடப்பட்டது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அயோக்யா டீஸரை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என கடந்த ஆண்டு விஷாலின் நடிப்பில் இரு படங்கள் வெளியாகின. அதில், இரும்புத்திரை 100 நாட்களை கடந்து மாபெரும் வசூல் சாதனை மற்றும் நல்ல திரைப்படம் என்ற விமர்சனத்தையும் பெற்றது.

இந்நிலையில், அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள அயோக்யா படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீஸர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, இமைக்கா நொடிகள், அடங்கமறு படங்களில் நடித்த ராஷி கன்னா நடித்துள்ளார். பார்த்திபன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை போன்று அயோக்யா படத்தின் டீஸர் காட்சிகள் அட்டகாசமாக உள்ளன.

Trending

Exit mobile version