சினிமா செய்திகள்

விஷாலை எதிர்க்கும் ஐசரி கணேஷ்; கார்த்திக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?

Published

on

நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்க்க களமிறங்கியுள்ளார் ஐசரி கணேஷ்.

நாசருக்கு எதிராக தலைவர் பதவிக்கு வெயிட்டான வேட்பாளராக பாக்யராஜை களமிறக்கியுள்ளார். அதேபோல கார்த்திக்கு எதிராக ஜெயம் ரவியை களமிறக்க ஐசரி கணேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நாசரை எதிர்த்து இயக்குனர் கே.பாக்யராஜ் நிற்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். மேலும், விஷாலை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு மாற்றாக ஐசரி கணேஷ் டீமில் ஜெயம் ரவி களமிறக்கப் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version