பர்சனல் ஃபினான்ஸ்

பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. வட்டி விகிதத்தை உயர்த்திய பிரபல வங்கி!

Published

on

தனியார் வங்கி நிறுவனமான ஆக்சிஸ் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை நவம்பர் 5-ம் தேதி முதல் உயர்த்தி அறிவித்துள்ளது.

45 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 1.15 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 2 கோடி ரூபாய்க்குள் முதலீடு செய்பவர்களுக்குக் குறைந்தபட்ச வட்டி விகிதம் 3.50 சதவிகிதமாக உள்ளது. அதிகபட்ச வட்டி விகிதம் 6.50 சதவிகிதம் வரை வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்குக் குறைந்தபட்சம் 3.50 சதவிகிதம் முதல் 7.25 சதவிகிதம் வரை வழங்கப்படுகிறது.

ஆக்சிஸ் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

ஆக்சிஸ் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை முதலீடு செய்தால் 3.5 சதவிகித வட்டி விகித லாபம் கிடைக்கும். 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை முதலீடு செய்தால் 4 சதவிகித லாபம் கிடைக்கும். 61 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை முதலீடு செய்தால் 4.5 சதவிகித லாபம் கிடைக்கும். 6 மாதம் முதல் 9 மாதங்கள் வரை முதலீடு செய்தால் 5.25 சதவிகித லாபம் கிடைக்கும். 9 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதலீடு செய்தால் 5.5 சதவிகித லாபம் கிடைக்கும். ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை முதலீடு செய்தால் 6.25 சதவிகித லாபம் கிடைக்கும்.

18 மாதங்கள் முதல் 3 வருடம் வரை முதலீடு செய்யும் போது 6.3 சதவிகித லாபம் கிடைக்கும். 3 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது 6.5 சதவிகித லாபம் கிடைக்கும்.

மூத்த குடிமக்களுக்கு ஆக்சிஸ் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

மூத்த குடிமக்கள் 1 வருடம் முதல் 18 மாதங்கள் வரை முதலீடு செய்யும் போது 7 சதவிகிதம் வட்டி விகித லாபம் கிடைக்கும். 18 மாதங்கள் முதல் 3 வருடம் வரை முதலீடு செய்தால் 7.05 சதவிகித லாபம் கிடைக்கும். 3 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது 7.25 சதவிகித வட்டி விகித லாபம் கிடைக்கும்.

ஆக்சிஸ் வங்கி டொமஸ்டிக் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Axis-Bank-fixed-deposit-wef-05-11-2022.pdf” title=”Axis Bank fixed-deposit-wef-05-11-2022″]

ஆக்சிஸ் வங்கி டொமஸ்டிக் பிக்சட் டெபாசிட் பிளஸ் வட்டி விகிதம்

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/fixed-deposit-plus-wef-02-11-2022.pdf”]

என்ஆர்ஐ பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/nri-callable-deposit-wef-05-11-2022.pdf”]

என்ஆர்ஐ பிக்சட் டெபாசிட் பிளஸ் வட்டி விகிதம்

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/nre-fixed-deposit-plus-wef-02-11-2022-non-callable.pdf”]

 

seithichurul

Trending

Exit mobile version