சினிமா செய்திகள்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் – தமிழ் வசனம் எழுதுகிறார் ஏ.ஆர். முருகதாஸ்!

Published

on

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரின் தொடர்ச்சியும் முடிவுமான அவெஞ்சர்ஸ் வரிசையின் 4வது பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகம் முழுக்க பல மொழிகளில் வெளியாகிறது.

தமிழில் வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வசனம் எழுத உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு பிரம்மாண்ட படத்திற்கு ஏ.ஆர் முருகதாஸ் வசனம் உள்ளதால், படத்தின் எதிர்பார்ப்பு இந்திய அளவில் மேலும் எகிறியுள்ளது.

அயன்மேன், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோ மற்றும் வில்லன் தானோஸ், அவனை அழிக்க வரும் கேப்டன் மார்வெல் என அனைவரும் தமிழில் முருகதாஸ் எழுதும் வசனத்திற்கு வாயசைக்க உள்ளனர். இது ஏ.ஆர் முருகதாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வரும் ஏப்ரல் 26ஆம் தேதி அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version