சினிமா செய்திகள்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆந்தம் நல்லா இல்லையா?

Published

on

ஏப்ரல் மாதம் பிறந்து விட்டது. உலகமே எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் தானோஸின் மரணம் அவெஞ்சர்ஸ் படையால் இந்த மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக உலகமுள்ள மார்வெல் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில், இந்திய மார்வெல் நிறுவனம், படத்திற்கான புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு அங்கமாக, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு, நேற்று இரவு அதன் இந்தி வெர்ஷன் ரிலீஸ் ஆகியுள்ளது. 10 மணி 1.3 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்தாலும், ஆந்தமை பார்த்த பலரும், தங்கள் எதிர்பார்ப்பை ஏ.ஆர். ரஹ்மான் பூர்த்தி செய்யவில்லை என புலம்பி வருகின்றனர்.

ஏதோ இந்தி படத்திற்கு இசையமைத்தது போல, ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்றும், பெரிய அளவுக்கு இன்ஸ்பிரேஷன் மற்றும் எமோஷனல் கனெக்டை இந்த பாடல் தரவில்லை எனவும் கமெண்ட் பாக்ஸில் குறை கூறி வருகின்றனர்.

இந்த பாடலின், தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன் விரைவில் வெளியாகும் என ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version