சினிமா செய்திகள்

பாகுபலி வசூல் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

Published

on

இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இந்தி பதிப்பில் மட்டும் 157.20 கோடியை கடந்த 3 நாட்களில் வசூலித்து பாகுபலியின் முதல் வார வசூலை முறியடித்துள்ளது.

பாலிவுட் படங்களின் முந்தைய முதல் வார வசூல்களை பாகுபலி 2 படம் முறியடித்தது. இந்த படம் 128 கோடி ரூபாயை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என்ற முதல் வாரத்தில் ஓடி மாபெரும் வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இந்தியாவில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் வெள்ளிக்கிழமை – 53.10 கோடி ரூபாயும், சனிக்கிழமை 51.40 கோடி ரூபாயும், ஞாயிற்றுக் கிழமை – 52.70 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக 157.20 கோடியை வசூல் செய்து பாகுபலி 2ம் பாகத்தின் வசூலை விட 30 கோடி ரூபாய் அதிக வசூலை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் 2000 திரையரங்குகளில் வெளியாகி 94.30 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 2845 திரையரங்குகளில் வெளியாகி 157.20 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்த படம் இந்தியா முழுவதும் 187.14 கோடியை வசூலித்துள்ளதாக டிஸ்னி இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளவில் 5 ஆயிரம் கோடி வசூலை முதல் வாரத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version