சினிமா செய்திகள்
52 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸான ‘அவதார் 2’ எப்படி இருக்கு? டுவிட்டர் விமர்சனம்!
உலகம் முழுவதும் இன்று 52,000 திரையரங்குகளில் வெளியான ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்’ திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் வசூலித்த தொகையை இன்னும் 13 ஆண்டுகள் ஆகியும் எந்த படமும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி இந்த படம் ஆஸ்கார் அவார்டுகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து தற்போது ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது, இந்தியாவில் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் உலகம் முழுவதும் 160 மொழிகளிலும் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் முன்பதிவு மட்டுமே மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ‘அவதார்’ படத்தைப் பார்த்தவர்கள் இந்த படத்தை மிகவும் பிரமிப்புடன் பார்க்க காத்திருந்த நிலையில் சமூகவலைதளத்தில் இந்த படத்தை பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
3 மணி நேரம் என்பது நாம் வேறு ஒரு உலகத்தில் இருந்தது போலவும் இந்த படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களையும் தான் ரசித்ததாகவும் இதை விட சிறந்த இயக்கம் உள்ள திரைப்படத்தை இனிமேல் பார்க்கவே முடியாது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது
13 வருட காத்திருப்புக்கு மிகப்பெரிய விஷுவல் விருந்து கிடைத்துள்ளது என்றும் இந்த படம் நிச்சயம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றும் இன்னொரு டுவிட்டர் பயனாளி தெரிவித்துள்ளார்
மிகப்பெரிய விஷுவல் எபெக்ட் என்றும் விஷுவல் எபெக்ட்டிற்காக படக்குழுவினர் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு காட்சியை பார்க்கும்போது தெரிகிறது என்றும் வேறு சிலர் பதிவு செய்துள்ளனர். இந்த படம் குறித்த மற்ற விவரங்களை தற்போது பார்ப்போம்.
#AvatarTheWayOfWater Review: one of the most visually beautiful looking movies ive seen, the water scenes look phenomenal & the jake sully family dynamic is what saves this film. Other than that story is a bit flat & it's not as good as the first. Movie is 40 minutes too long pic.twitter.com/GnSQNdubIz
— The Menace ???? (@senseiisaac69) December 16, 2022
Just now finished watching AVATAR THE WAY OF WATER in IMAX, such a great experience in IMAX and i strongly recommend each and everyone out here to enjoy this movie in IMAX firstly.
The CGI,DOP,COLOR GRADING is tremendous & screenplay too.EPIC SEQUEL ???? pic.twitter.com/4wJij1SFtp
— 11:11 (@Ameen__Xo) December 15, 2022
#AvatarTheWayOfTheWater First 90mins has surreal experience with ethereal visuals. The Na'vi family moving to water village & aftermath sequence are so heart-warming. 25 mins underwater visuals are magnificent. Looks like a high octane adventure in next hours. #Avatar2review pic.twitter.com/ty7Vbo4CJu
— Richard Mahesh (@mahesh_richard) December 16, 2022