ஆன்மீகம்

ஆவணி மாதம் 2024: முக்கிய விரதங்கள், பண்டிகை நாட்கள் பற்றிய முழு விவரம்!

Published

on

2024ஆம் ஆண்டின் ஆவணி மாதம் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் நடக்கும் விரதங்கள், பண்டிகைகள் மற்றும் முகூர்த்த நாட்கள் குறித்த முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

ஆவணி மாதம்:

ஆவணி மாதம் தமிழ் காலண்டரின் ஐந்தாவது மாதமாகும். இந்த மாதத்தில் சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ஆண்டு, ஆவணி மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி, செப்டம்பர் 16ஆம் தேதி திங்கள்கிழமை வரை நீடிக்கும்.

முக்கிய விசேஷங்கள்:

19 ஆகஸ்ட் (ஆவணி 3): ஆவணி அவிட்டம்
20 ஆகஸ்ட் (ஆவணி 4): காயத்ரி ஜெபம்
22 ஆகஸ்ட் (ஆவணி 6): மகா சங்கடஹர சதுர்த்தி
26 ஆகஸ்ட் (ஆவணி 10): கிருஷ்ண ஜெயந்தி
7 செப்டம்பர் (ஆவணி 22): விநாயகர் சதுர்த்தி
15 செப்டம்பர் (ஆவணி 30): ஓணம் பண்டிகை
16 செப்டம்பர் (ஆவணி 31): மிலாடி நபி

முக்கிய விரத நாட்கள்:

2 செப்டம்பர் (ஆவணி 17): அமாவாசை
19 ஆகஸ்ட் (ஆவணி 3): பௌர்ணமி
26 ஆகஸ்ட் (ஆவணி 10): கிருத்திகை
18 ஆகஸ்ட் (ஆவணி 2) & 14 செப்டம்பர் (ஆவணி 29): திருவோணம்
29 ஆகஸ்ட் (ஆவணி 13) & 14 செப்டம்பர் (ஆவணி 29): ஏக தாசி

சுப முகூர்த்த நாட்கள்:

22 ஆகஸ்ட் (ஆவணி 6): தேய்பிறை முகூர்த்தம் (வியாழன்)
5 செப்டம்பர் (ஆவணி 20): வளர்பிறை முகூர்த்தம் (வியாழன்)

அஷ்டமி, நவமி, மற்றும் கரி நாட்கள்:

அஷ்டமி: 26 ஆகஸ்ட் (ஆவணி 10), 11 செப்டம்பர் (ஆவணி 25)
நவமி: 27 ஆகஸ்ட் (ஆவணி 11), 12 செப்டம்பர் (ஆவணி 27)
கரி நாட்கள்: 18 ஆகஸ்ட் (ஆவணி 2), 13 செப்டம்பர் (ஆவணி 28)
இந்த மாதத்தில் விரதம் மற்றும் பண்டிகைகள் அதிக அளவில் இருப்பதால், முழுமையான நன்மைகளை பெறுவதற்காக இந்த நாட்களில் வழிபாடுகளை முறையாக செய்யுங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version