தமிழ்நாடு

இனி சிக்னலில் நிற்காமல் போனல் செல்போனுக்கு அபராத ரசீது: சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு

Published

on

 

சென்னையில் இனி சிக்னலில் நிற்காமல் போனாலும், சிக்னல் விதிமுறைகளை மீறினாலும் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு தானாகவே அபராத ரசீது வரும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தானியங்கி அபராத முறையை சற்று முன் தொடங்கி வைத்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் ’அண்ணாநகர் உள்பட 5 சிக்னல்களில் இந்த தானியங்கி அபராத முறை தற்போது கொண்டுவரப்பட்டதாகவும் சிக்னல் விதிகளை மீறுபவர்களின் செல்போன் எண்ணுக்கு அபராதத்துடன் கூடிய ரசீது செல்லும் என்றும் அந்த அபராதத்தை கட்டி தீரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிக்னலில் இனி காவல்துறையினர் இல்லை என்பதற்காக சிக்னல் விதிகளை மீற முடியாது என்றும் அப்படி மீறினால் தானியங்கி இயந்திரம் உடனடியாக அவர்களுடைய வாகன எண்களை வைத்து செல்போன் எண்ணை கண்டுபிடித்து அந்த செல்போன் எண்ணுக்கு அடுத்த ஒரு நிமிடத்தில் அபராத ரசீதை அனுப்பி விடும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது ஐந்து இடங்களில் மட்டும் இந்த தானியங்கி அபராத இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த தானியங்கி அபராத முறை சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்தார்.

Trending

Exit mobile version