தமிழ்நாடு

ரூ.12 ஓணம் பம்பர் லாட்டரி: இருவர் சொந்தம் கொண்டாடியதால் பரபரப்பு!

Published

on

கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி என்ற நிலையில் அந்த பரிசை இருவர் உரிமை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. கேரள அரசின் அதிகார பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இந்த லாட்டரி ஓணம் பம்பர் லாட்டரி ஆக முதல் பரிசு ரூபாய் 12 கோடி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குலுக்கள் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் டிஇ 645465 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூபாய் 12 கோடி என அறிவிக்கப்பட்டது. அந்த லாட்டரி சீட்டுக்கு சொந்தம் கொண்டாடி சில மணிநேரங்கள் யாரும் வராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி 12 கோடி ரூபாய் தனக்கு விழுந்து இருப்பதாகவும் துபாயை சேர்ந்த சைதல்வி என்பவர் உரிமை கோரினார். தன்னுடைய நண்பரிடம் ரூபாய் 300 கொடுத்து ஓணம் பம்பர் லாட்டரி வாங்க சொன்னதாகவும் அவர் லாட்டரியை வாங்கி தனக்கு புகைப்படம் எடுத்து ஈமெயிலில் அனுப்பியதாகவும் அந்த எண்ணிற்கு தான் தற்போது ஓணம் பம்பர் லாட்டரி விழுந்ததாகவும் அதனால் தனக்கு அந்த 12 கோடியை தர வேண்டுமென்றும் உரிமை கோரினார்.

ஆனால் விசாரணையில் அவரது நண்பர் அவரை ஏமாற்றி உள்ளார் என்றும் அவர் வாங்கிய சீட்டுக்கு லாட்டரி பரிசு விழவில்லை என்றும் செய்தித்தாளில் வந்த பரிசு சீட்டின் புகைப்படத்தை எடுத்து அவர் தனது நண்பருக்கு விளையாட்டாக அனுப்பி இருப்பதாகவும் தெரிய வந்தது.

அப்படி என்றால் உண்மையாகவே அந்த லாட்டரி பரிசு யாருக்கு கிடைத்தது என்ற குழப்பம் மீண்டும் நீடித்தது. இந்த நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயபாலன் என்பவருக்கு தான் ஓணம் பம்பர் பரிசு விழுந்ததாக உறுதிசெய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஜெயபால் லாட்டரி சீட்டு வாங்கி வந்ததாகவும் தற்போது அவருக்கு ரூபாய் 12 கோடி பரிசு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் லாட்டரி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

தனக்கு சில லட்சங்கள் கடன் இருப்பதாகவும், அந்த கடனை அடைத்து விட்டு மீதி உள்ள பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்வேன் என்றும் பொது காரியங்களுக்காக செலவு செய்வேன் என்றும் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். லாட்டரி விற்பனை செய்த ஏஜென்சியின் கமிஷன், வரிகள் போக அவருக்கு சுமார் 7.4 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version