தமிழ்நாடு

தமிழகத்தில் உயருகிறது ஆட்டோ கட்டணம்: அரசு நிர்ணயித்த வாடகை எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆட்டோ வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 ஆண்டுகள் கழித்து ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக இருந்தது. மேலும் கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்றும், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என்றும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் நிர்வாகச் செலவுகள் உயர்வு காரணமாக ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, குழு அமைத்து ஆட்டோ கட்டணத்தை எவ்வளவு அதிகரிக்கலாம் என்று ஆய்வு செய்தது. இந்த நிலையில் அரசு அமைத்த குழுவின் பரிந்துரையின்படி தற்போது ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இதன்படி 1.5 கிலோ மீட்டருக்கு உள்ளான துாரத்திற்கு கட்டணமாக 40 ரூபாய் எனவும், கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version