இந்தியா

தலித் திருமணத்தை நிறுத்திய 48 இஸ்லாமியர்கள் வீடுகள் இடிப்பு: மத்தியபிரதேசத்தில் பரபரப்பு

Published

on

தலித் ஒருவரின் திருமணத்தின்போது கல்லெறிந்து பிரச்சனை செய்த முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் ஒருவரின் திருமணத்தின் போது முஸ்லிம்கள் பிரச்சனை செய்தனர். மசூதிக்கு எதிரே உள்ள திருமண மண்டபத்தில் குத்துப்பாட்டுகள் ஒலிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த் முஸ்லிம்கள் குரல் கொடுத்தனர்.

இதனை வாக்குவாதம் முற்றியதில் தலித் இளைஞரின் திருமணத்தின் போது அங்கிருந்த முஸ்லிம்கள் கல்லெறிந்து பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் பிரச்சனை செய்த முஸ்லீம்கள் வீடுகள் அனைத்தும் அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது.

இதனையடுத்து 48 வீடுகள் இடிக்கப்பட்ட உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அந்த வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version