கிரிக்கெட்

#AUSvsIND | இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டின் முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா!

Published

on

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது. மெல்பேர்ணில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 195 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக பும்ரா 4 வெக்கெட்களும், அஷ்வின் 3 விக்கெட்களும், சிராஜ் 2 விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா 1 வெக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து விளையாடத் தொடங்கிய இந்திய அணி 11 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழந்து 36 ரன்களை எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 6 பந்துகளை எதிர்கொண்டு ஸ்டார்க் வீசிய பந்தில் டக் அவுட் ஆனார். சுபம் கில் 36 பந்துகளுக்கு 28 ரன்களும், செத்தேவர் புஜாரா 23 பந்துகளுக்கு 7 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வந்தனர்.

நாளை தொடரும் இந்த இன்னிங்ஸில் 159 ரன்கள்: எடுத்தால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும்.

Trending

Exit mobile version