கிரிக்கெட்

“இந்த ரணகளத்திலேயும் ஒரு…”- முதல் டெஸ்டு சொதப்பல்; பிரித்வி ஷாவின் வைரஸ் போஸ்ட்!!!

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி படுதோல்வியடைந்தது. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. இந்தப் போட்டி மூலம் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்கிய பிரித்வி ஷா மீது நெட்டிசன்ஸ் பொங்கி தீர்த்தனர். அவர் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 0 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். 21 வயதேயாகும் பிரித்வி ஷா, உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கிய காரணத்தால் சர்வதேச அளவிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில், பிரித்வி ஷா, ‘சில நேரங்களில் நீங்கள் செய்ய முயலும் விஷயத்தை மக்கள் விமர்சித்து எதிர்மறையாக பேசுகிறார்கள் என்றால், உங்களால் அதை செய்ய முடியும் என்று அர்த்தம். அவர்களால் அதை செய்ய முடியாது என்று பொருள்’ என்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்ட் செய்துள்ளார். பிரித்வி ஷாவின் இந்த போஸ்டும் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

Trending

Exit mobile version