தமிழ்நாடு

கிளென் மாக்ஸ்வெல்லை திருமணம் செய்யும் தமிழ்ப்பெண்: வைரலாக்கும் திருமண பத்திரிகை

Published

on

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இவர்களது திருமண பத்திரிக்கையை தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் ஐபிஎல் பெங்களூரு அணியின் முக்கிய வீரர் மேக்ஸ்வெல் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தமிழ் பெண் வினி இராமன் என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களது திருமணம் தற்போது இரு தரப்பு பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு மார்ச் 27ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மணமகள் வினி ராமன் தமிழ் பெண் என்பதால் அவரது திருமண பத்திரிகையும் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் திருமண பத்திரிக்கை தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த தமிழ் பெண்ணான வினி ராமன் பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லை திருமணம் செய்ய உள்ளதை அடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version