கிரிக்கெட்

‘இன்னா போங்கு..!’- பந்தை டிஷர்டுக்குள் வைத்து ரன் எடுக்க முயன்ற ஆஸி., கிரிக்கெட் வீரர்

Published

on

ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் போட்டி ஒன்றில் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. அது குறித்தான வீடியோ தற்போது பார்ப்போரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

பிக் பாஷின் சனிக்கிழமை ஆட்டத்தில் மெல்பர்ன் ஸ்டார்ஸும் சிட்டி தண்டரும் மோதினார்கள். இதில் ஸ்டார்ஸ் அணி சார்பில் கடைசி ஓவரில் நிக் லார்கின் என்ற பேட்ஸ்மேன் ஸ்டிரைக்கில் இருந்தார். அவருக்கு டேனியல் சாம்ஸ் என்னும் பவுலர் பந்துவீசினார். பந்து அருகில் வர, கண்ணை மூடிக் கொண்டு சுற்றினார் லார்கின். பந்து எங்கு போனது என்பது கூட தெரியாமல் சிங்கிள் எடுக்க முயன்றார்.

 


அவருக்கு மட்டுமல்ல மைதானத்திலிருந்த யாருக்கும் பந்து எங்கு சென்றது என்பது தெரியவில்லை. அவர் பாதி சிங்கிள் எடுத்த பின்னர்தான், பந்து அவரின் டிஷர்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டது தெரிகிறது. சிரித்துக் கொண்டே சிங்கிள் எடுத்து சமாளித்தார் லார்கின். ஆனால் நடுவர்கள், இந்த சிங்கிளுக்கு ரன் ஏதும் தர முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் மீண்டும் ஸ்டிரைக் எடுத்தார் லார்கின். அவர் இப்படி விசித்திரமான முறையில் ரன் எடுக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version