வைரல் செய்திகள்

பீர் பீப்பாய்களைக் காப்பற்ற உயிரைப் பணயம் வைத்த பெண்..!- வைரல் வீடியோ

Published

on

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் பீர் பீபாய்களைக் காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் தொடர் புயல், மழை என மக்களை அச்சுறுத்தி வருகிறது. புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அந்நாட்டு அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த புயல் மழையின் நடுவே பெண் ஒருவர் செய்த செயல்தான் தற்போது வைரலாகி வருகிறது. மழை வெள்ளத்தில் க்ளப் ஒன்றில் பீர் பீபாய்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பீர் பீப்பாய்களை பார்த்தததும் அதை எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். உடனடியாக வெள்ளம், புயல் என மறந்து தன் உயிரையும் பணயம் வைத்து நீருக்குள் குதித்து பீர் பீப்பாய்களைக் கைப்பற்றிக் கொண்டு நீந்தி கரை சேர்ந்தார்.

இந்தக் காட்சியை பக்கத்து வீட்டினார் வீடியோவாக எடுக்க அது தற்போது வைரலாகி உள்ளது.

Trending

Exit mobile version