கிரிக்கெட்

‘முதல் டெஸ்ட்ல ஜெயிக்கப் போறது ஆஸ்திரேலியாதான்!’ – கபில்தேவ் சொல்லும் காரணம் இதுதான்

Published

on

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்துக் கொண்டு டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறது. நாளை, 4 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், டி20 தொடரை இந்தியா வென்றது. இதனால் நாளை ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. இந்நிலையில் அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்பது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ‘இந்த டெஸ்ட் போட்டியில் நான் ஆஸ்திரேலிய அணி வெல்லும் என நினைக்கிறேன். இந்திய ரசிகர்கள் தவறாக என்ன வேண்டாம். ஏனெனில் அவர்கள் மிகவும் பழக்கப்பட்ட மைதானத்தில் விளையாடுகிறார்கள். மைதானம் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட அதிக அளவில் பிங்க் நிற பந்தில் விளையாடி இருக்கிறது. அதனால் இரவு நேரங்களில் பந்தின் செயல்பாடு எந்த அளவிற்கு இருக்கும் என ஆஸ்திரேலியர்கள் நன்கு அறிவர். அதனடிப்படையிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என நான் குறிப்பிட்டிருக்கிறேன்’ என்றார்.

அவர் மேலும், ‘ஆஸ்திரேலிய பிட்ச்களில் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் கிடைத்தவுடன் இந்திய பவுலர்கள், பந்தை ஷார்ட் லென்த்தில் குத்தக் கூடாது. அவர்களின் பலங்கள் என்ன என்பதை நன்கு உணர்ந்துதான் பவுலர்கள் பந்துவீச வேண்டும். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைப் பின்பற்றி செயல்படக் கூடாது’ என்று எச்சரித்துள்ளார்.

 

 

 

Trending

Exit mobile version