கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் திடீரென ஏற்பட்ட கார் விபத்தில் மரணமடைந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளிலும் மிகச் சிறப்பாக தமது விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தில் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் சென்ற கார் பலமுறை உருண்டு கடும் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கார் விபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version