தமிழ்நாடு

நாளையும் 11ஆம் தேதியும் அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தடை!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று சுமார் 2000 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள தமிழக அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை மற்றும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆடி அமாவாசையை என்பதால் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசின் இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடிப்பூரம் என்பதால் அன்றைய தினமும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆகிய இரண்டு நாட்களிலும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தடை என்று அறிவிக்கப்பட்ட போதிலும் ஆகம விதிகளின்படி கோயில்களில் பூஜை நடைபெறும் என்று தமிழக அரசின் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் நாளை ஞாயிறு மற்றும் ஆகஸ்ட் 11ஆம் தேதி புதன் ஆகிய இரண்டு நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version