பிற விளையாட்டுகள்

தேசிய ஈட்டி எறிதல் தினம்: தடகள சம்மேளனம் அறிவிப்பு

Published

on

ஆகஸ்டு 7ஆம் தேதி இனி தேசிய ஈட்டி எறிதல் தினம் என அறிவிக்கப்படுவதாக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது

சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது தெரிந்ததே. இந்திய விளையாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நாளான இந்த நாளை இந்திய தடகள சம்மேளனம் தேசிய ஈட்டி எறிதல் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கு பின்னர் தடகள போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளதை அடுத்து அந்த தங்கத்தை பெற்றுக் கொடுத்த நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக இந்த தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு வீரர்கள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்
ஆகஸ்ட் 7ஆம் தேதி அவர் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி கொடுத்ததை அடுத்து அன்றைய தினம் தேசிய ஈட்டி தினமாக கொண்டாட முடிவு செய்ததற்கான அறிவிப்பு வெளியானது அனைத்து ஈட்டி எறிதல் வீரர்களுக்கும் பெருமை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பல்வேறு பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version