Connect with us

மாத பலன்

உங்கள் ராசிக்கான ஆகஸ்ட் 2019 மாத ராசிபலன்கள்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரக நிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – சுகஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  – அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ)  – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

அதிக புத்தி சாதுர்யத்துடன் இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம்  நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி  நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும்  உதவி தாமதமாக கிடைக்கும்.  சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்

அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்

மாணவர்கள் எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்

அச்வினி:

இந்த மாதம் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும்.

பரணி:

இந்த மாதம் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலை நல்லமுறையில் அபிவிருத்திச் செய்யமுடியும்.

கார்த்திகை 1 – ம் பாதம்:

இந்த மாதம் பெரிய ஆர்டர்களும் கிடைக்கப்பெற்று உங்களின் தகுதியும், தரமும் உயரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் உங்களின் லாபத்தை அதிகரிக்கும்.

பரிகாரம்:  செவ்வாய் தோறும் முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்

அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, மஞ்சள்

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  – களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

புதிய ஆர்டர்களைப் பெறப் போகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே  செய்த திறமையான பணிகளுக்கு  உரிய நற்பலனை பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

பெண்கள் அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்

மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப்பலனை அடையமுடியும்.

ரோகிணி:

இந்த மாதம் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

மிருகசீர்ஷம்:

இந்த மாதம் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஆரஞ்சு, மஞ்சள்

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரக நிலை:

ராசியில் புதன்,  ராஹூ – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு (வ)  – களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

கவலைகளை பொடிப்பொடியாக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம்  சிற்சில பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.  மற்றவர்களின் செயல்களால் மனஅமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு.  பணவரவு ஏற்படும். நீண்ட நாட் களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.

தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள்.  அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல் துறையினருக்கு சாதகமான  செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்தின் பார்வை  அதிகரிக்கும்  அமையும்.

பெண்கள் எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது.  பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

மிருகசீர்ஷம் 3,4 பாதங்கள்:

இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும்.

திருவாதிரை:

இந்த மாதம் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலை இருக்கும் என்றாலும் முடிந்தவரை பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சனைகள் தீரும். பண கஷ்டம் தீரும்..

அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, வெள்ளை

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15,

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்):

கிரக நிலை:

ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ)  – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது – விரைய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும்.  பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்குவன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்ட மிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன்  அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்..

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். என்னும் ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது

பெண்கள் எந்த ஒரு காரியத்தை யும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர் வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன்  செயல்படுவீர்கள்..

புனர்பூசம் 4 – ம் பாதம்:

இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, ஞாபக மறதி, மந்தமான நிலைகள் ஏற்படும்.

பூசம்:

இந்த மாதம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மனஉளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

ஆயில்யம்:

இந்த மாதம் குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

பரிகாரம்: பௌர்ணமி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வர வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஊதா, வெள்ளை

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரக நிலை:

சுகஸ்தானத்தில்  குரு (வ)  – பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது – லாப ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – விரைய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

கூடுதலாக உழைக்க காத்திருக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன் றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் ஆன்மீக பயணங்கள் சென்று வருவீர்கள்

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

பெண்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.

மகம்:

இந்த மாதம் உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

பூரம்:

இந்த மாதம் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியாது. கொடுக்கல்-வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல்போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

உத்திரம் 1ம்- பாதம்:

இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசுவழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: நீலம், பிரவுன்

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20,

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரக நிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  – சுகஸ்தானத்தில் சனி (வ), கேது – தொழில் ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

உடல் நிலையில் தொய்வை சந்திக்க காத்திருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளை களால் பெருமை சேரும்.

கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.

பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடையமுடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரியநேரிடும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:

இந்த மாதம் புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி அமையும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும்.

பரிகாரம்: நவகிரக புத பகவானுக்கு பச்சைபயிறு படைத்து வணங்கி வர மனதில் தைரியம் உண்டாகும்.  எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, நீலம்

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது –  பாக்கிய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

உறவினர் வருகையை விரும்பும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவ பூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்

கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்

அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதற்கான பலனும் பெறுவீர்கள். நேரத்தை வீணாக்காமல் உபயோகப் படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்

பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கி யம் உண்டாகும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: பிரவுன், வெள்ளை

சித்திரை3, 4 பாதங்கள்:

இந்த மாதம் அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்.

ஸ்வாதி:

இந்த மாதம் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம்.  உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.

விசாகம் 1, 2 ,3 பாதங்கள்:

இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு தொழிலைப் பெருக்கமுடியும் என்றாலும் வேலைக்குத் தக்கசமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கி யம் உண்டாகும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: பிரவுன், வெள்ளை

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரக நிலை:

ராசியில்  குரு (வ)  – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இரவு, பகலாக உழைக்க காத்திருக்கும்  விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை  மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க   வழிசெய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங் கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்

பெண்கள் மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப் படும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

விசாகம் 4 – ம் பாதம்:

இந்த மாதம் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கிடுக்குப் பிடியான சூழ்நிலைகள் உண்டாகும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

அனுஷம்:

இந்த மாதம் சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவ-மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை.

கேட்டை:

இந்த மாதம் தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது சிறப்பு.  இக்காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு மருத்துவச்செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.

பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட  எதிர்ப்புகள்  அகலும். காரிய தடை நீங்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: நீலம், சிவப்பு

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27,

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரக நிலை:

ராசியில் சனி (வ), கேது – களத்திர  ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – விரைய ஸ்தானத்தில்  குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

உங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்தும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மனவருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்

அரசியல்வாதிகள் தொகுதி மக்களை சந்திப்பீர்கள். மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்..

பெண்கள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன் படுத்தி சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், ஊதா

மூலம்:

இந்த மாதம் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.

பூராடம்:

இந்த மாதம் கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். . தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறமுடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும்.

உத்திராடம் 1- ம் பாதம்:

இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப்பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், ஊதா

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரக நிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில்  குரு (வ)  – விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

செலவுகளை அதிகமாக சந்திக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும்  மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகும் சூழ்நிலை காணப்படுவதால் வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது அதிகரிக்கும் காலமாக அமையும்

பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்கள் கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கை யாக பழகுவது நல்லது

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சிவப்பு, கருநீலம்

உத்திராடம்2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. நினைத்த காரியங்களை நிறைவேற்றமுடியாது.

திருவோணம்:

இந்த மாதம் பணவரவுகளிலும் தடை ஏற்படுவதால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவிஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:

இந்த மாதம் சோதனையான காலமாகும். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சற்று ஓங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சிவப்பு, கருநீலம்

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரக நிலை:

பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில்  குரு (வ)  – லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பெறப் போகும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும்.

தொழில் முன்னேற்றம் காணப்படும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். புது ஒப்பந்தம் கையெழுத்திடும் போதும் ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசித்து செய்வது நல்லது.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். பின்னாளில் அதுவே உங்களுக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். கவனம் தேவை

பெண்கள் மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஆரஞ்சு, வெளிர்நீலம்

அவிட்டம்3, 4 பாதங்கள்:

இந்த மாதம் நெருங்கியவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் என்றாலும் உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை முழுவதும் நம்பிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் அமையும்.

ஸதயம்:

இந்த மாதம் திருமண சுபகாரியங்கள்கூட கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப்பளுவையும் குறைத்துக்கொள்ள முடியும்.

பூரட்டாதி1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். அரசியல்வாதிகளுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஆரஞ்சு, வெளிர்நீலம்

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரக நிலை:

சுகஸ்தானத்தில் புதன்,  ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  – தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

மற்றவர்களை மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போதும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.  கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.  பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்

பெண்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்

மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 4 – ம் பாதம்:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய  வற்றால் நல்ல மேன்மை உண்டாகும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகையைக்கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

ரேவதி:

இந்த மாதம் பொன், பொருள் சேரும். மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்கூட அனுகூலப்பலனை அடையமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, மஞ்சள்

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!