தமிழ்நாடு

அதிமுகவை விளாசிய ஆடிட்டர் குருமூர்த்தி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி நாடு முழுவதும் பெரும் வெற்றியை ஈட்டினாலும் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வியது. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது. பாஜக அதிமுக கூட்டணி 1 இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது.

நாடுமுழுவதும் மோடி அலை வீசினாலும் தமிழகத்தில் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக அலைவீசியதால் திமுக கூட்டணி வெற்றிபெற்றதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சில அதிமுகவினரே தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலைவீசியதால் தான் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தோல்வியை தழுவியதாக கூறினர்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக ஆதரவு ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக 2 இடங்களில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், 5 இடங்களில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மேஎலும் 5 இடங்களில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது.

ஆனால் பாஜக 2 இடங்களில் 2 லட்சத்துக்கு குறைவான வாக்குகள், ஒரு இடத்தில் 3 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள், மேலும் ஒரு இடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளில் தோற்றது. மோடிக்கு எதிரான அலை இருந்திருந்தால் 5 இடங்களிலும் 4 முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் அதிமுகவிற்கு எதிரான அலை வீசியதால் தான் தோற்றோம் என அதிமுகவை விளாசியுள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.

author avatar
seithichurul

Trending

Exit mobile version