உலகம்

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு: அதிர்ச்சி தகவல்!

Published

on

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து மீனவர்களையும் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலம் விட இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக மீனவர்களை அராஜகமாக கைது செய்தது மட்டுமின்றி அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் திரும்ப ஒப்படைக்காமல் ஏலம் விட முடிவு செய்திருப்பது தமிழக மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 7ஆம் தேதி யாழ் நகரில் 65 படகுகளும், பிப்ரவரி 8ஆம் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளும், பிப்ரவரி 9ஆம் தேதியை கிராஞ்சி என்ற பகுதியில் 24 படகுகளும், பிப்ரவரி 10ஆம் தேதி தலைமன்னார் என்ற பகுதியில் 9 படகுகளும் பிப்ரவரி 11ஆம் தேதி கற்பிட்டி என்ற பகுதியில் இடம் இரண்டு படகுகளும் ஏலம் விடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மத்திய அரசு உடனடியாக இந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி அந்த படகுகளை மீட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version