தமிழ்நாடு

2 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தால் மாரடைப்புக்கு வாய்ப்பு: ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Published

on

இரண்டு மணி நேரம் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை செய்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.சமீபத்தில் மருத்துவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னிடம் வந்த நோயாளி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவருக்கு வெறும் 29 வயது மட்டும்தான் என்றும் அவருக்கு தான் சிகிச்சை அளித்ததாக கூறி உள்ளார்.

மேலும் அவருக்கு சிகரெட் மது உட்பட எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றும் சுகர் பிரஸர் உள்பட எந்த நோயும் இல்லை என்றும் ஆனால் எப்படி மாரடைப்பு வந்தது என்று தாங்கள் ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறினார். இதனை அடுத்து அவரது பணி குறித்து அவரிடம் விசாரித்த போது அவர் ஒரே இடத்தில் சுமார் 10 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார் என்பது தெரிய வந்ததாகவும், ஐடி துறையில் அவர் பணிபுரிகிறார் என்றும் தெரியவந்தது என்றும் கூறினார்.

இதனை அடுத்து ஒரே இடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து பணி புரிய வேண்டாம் என்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை எழுந்து ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். ஒரே இடத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்து வேலை பார்ப்பது ஒரு சிகரெட் புகைப்பதற்கு சமம் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/ChennaiViswa/status/1384491757400825858

seithichurul

Trending

Exit mobile version