தமிழ்நாடு

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஏடிஎம் கொள்ளையர் தலைவன்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் தலைவன் சவுகத் அலி, சற்று முன்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன,

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் வங்கிகளில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் இருந்து நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 50 லட்சத்துக்கும் மேல் கொள்ளையடித்த கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹரியானா சென்று கொள்ளையர்களை தேடி வந்தனர். ஹரியானாவில் முதலில் அமீர் என்ற கொள்ளையனும், அதன்பிறகு வீரேந்திர சிங், நசீர் ஆகிய இரண்டு கொள்ளையர்களும் பிடிபட்டனர். இவர்களுடன் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கொள்ளையர் தலைவன் சவுக்கத் அலி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்,

இதனை அடுத்து சற்றுமுன் சவுகத் அலி சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சவுகத அலியிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய இருப்பதாகவும் அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று ஏற்கனவே நசீரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், விரைவில் சவுகத் அலியையும் காவலில் எடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து மனுவை நீதிமன்றத்தில் விரைவில் காவல்துறையினர் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையர் தலைவனான சவுகத் அலியிடம் நடைபெறும் விசாரணையில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் செய்த கொள்ளை குறித்த தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

seithichurul

Trending

Exit mobile version