இந்தியா

இன்று முதல் ஏ.டி.எம் கட்டணம் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

Published

on

இன்று முதல் அதாவது ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் உயர்வு என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்தினால் இதுவரை 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ரூபாய் 21 கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்ல் மாதம் 5 முறை கட்டணமின்றி இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத இதர ஏடிஎம்களில் மாதம் 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 21 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version