சினிமா செய்திகள்

உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!

Published

on

பிரபல இயக்குனர் அட்லி உடனடியாக ரத்தம் தேவை என தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.

இவர் தனது சமூக வலைத்தளத்தில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உதவி இயக்குனரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், அதற்காக உடனடியாக ரத்தம் தேவை என்றும் தொடர்பு எண் மற்றும் மருத்துவமனை விவரங்களை குறிப்பிட்டு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அட்லியின் இந்த டுவிட்டை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அவர் குறிப்பிட்ட ரத்த வகையை தானம் செய்வதற்காக முன்வந்து கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்துள்ளனர். உதவி இயக்குனரின் தந்தைக்காக ரத்தம் தேவை என டுவிட் செய்து உதவி செய்த இயக்குனர் அட்லிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version