சினிமா
விஜயகாந்த் படத்தை அடிச்சா ஷாருக்கான் படம்!… மீண்டும் காப்பி சர்ச்சையில் அட்லீ….
![atlee2 - Bhoomitoday atlee](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/atlee2.jpg)
தமிழில் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் என 4 திரைப்படங்களை இயக்கியவர் அட்லீ. ஷங்கரின் உதவியாளரான இவர் ஏற்கனவே தமிழில் ஹிட் அடித்த திரைப்படங்களின் கதைகளை உல்டா செய்து திரைப்படங்களை இயக்குகிறார் என கூறப்படுவதுண்டு..
மௌன ராகம் படத்தை ராஜா ராணியாகவும், சத்ரியன் படத்தை தெறியாகவும், ரஜினி நடித்த மூன்று முகம் படத்தை மெர்சலாகவும் இயக்கினார் என திரையுலகில் பலரும் கூறுவதுண்டு.. அதேபோல், கூறிய பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கி தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைப்பதிலும் அட்லி கில்லாடி. எனவே, அவரை வைத்து படங்களை தயாரிக்கவே தமிழ்பட தயாரிப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானுக்கு படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார். அதில் வெற்றியும் பெற்று விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், விஜயகாந்த் நடித்து 2006ம் ஆண்டு வெளியான பேரரசு திரைப்படத்தின் கதை, திரைக்கதையை பட்டி டிங்கரிங் பார்த்து ஷாருக்கானுக்கு அட்லீ கூறியுள்ளார் என திரையுலகில் செய்திகள் கசிந்துள்ளது.