கிசு கிசு

ஷாருக் கானுக்கு அட்லி சொன்னது அந்த பட கதையா?

Published

on

அட்லி, ஷாருக்கானை வைத்து படம் இயக்கப் போவதாக பிகில் படம் ஷூட்டிங்கில் இருந்த போதிலிருந்து கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அட்லி ஷாருக்கானிடம் ஒரு கதை சொன்னதாகவும், அது கமல் நடித்த நாயகன் படம் கதை என்றும், அது ஏற்கனவே வெளியான படங்கள் போல உள்ளது, எனவே ஷாருக் வேறு கதையைத் தயார் செய்ய சொல்லிவிட்டார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், அட்லி மீண்டும் ஷாருக்கானிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும், அதில் ஷாருக் அப்பா, மகன் என்று இரட்டை கதாபாத்திரத்தில் வருவதாகவும், அப்பா ஸ்டிரிக்ட் போலீஸ் அதிகாரி என்றும், பையன் ரவுடி என்றும், கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இது நடிகர் சிவாஜி கனேஷன் நடித்த தங்கப்பதக்கம் படக் கதைத்தான் என்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை எல்லாம் பார்க்கும் போது, அட்லியே ஷாருக்கானுக்குக் கதை சொன்னாரா என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் இப்படி வதந்திகள் பரவி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ அட்லி, ஷார்க்கானை இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று காத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version