சினிமா செய்திகள்

தமிழுக்கு திரும்பினாலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அட்லி: எதிர்கால திட்டம் என்ன?

Published

on

பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் இயக்குநர் அட்லி அடுத்ததாக தமிழுக்கு திருப்பலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க எந்த பெரிய நடிகரும் முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இளம் இயக்குனர்கள் பெரிய நடிகர்களை வைத்து ஹிட் கொடுத்து வருகின்றனர். சிபி சக்கரவர்த்தி போன்ற அறிமுக இயக்குனர்களும் ஹிட் படங்களை கொடுக்கின்றனர். எனவே இவர்களுக்கு தான் திரும்பத் திரும்ப வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது.

அட்லிக்கு தொடர்ச்சியாக மூன்று முறை வாய்ப்பு கொடுத்த விஜய் கூட அட்லிக்கு அடுத்த பட வாய்ப்பை கொடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது கமல்ஹாசன் படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் படத்தை மீண்டும் இயக்கவுள்ளதாகவும், அதனை அடுத்து மீண்டும் கமல்ஹாசன் படத்தை இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எனவே விஜய் படத்தை இயக்குவதற்கு அட்லிக்கு இப்போதைக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் காப்பி அடித்து படம் இயக்குவார், அதிக பட்ஜெட்டில் படம் இயக்குவார், சொன்ன நேரத்தில் படத்தை முடிக்க மாட்டார் என்ற பெயர் அட்லிக்கு இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுத்த எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தமிழில் சொந்தமாக படம் தயாரிக்க அட்லி முடிவு செய்திருப்பதாகவும் சொந்தமாக படம் தயாரித்து ஒரு ஹிட்டை கொடுத்தால் அதன் பிறகு முன்னணி நடிகர்கள் தன்னை தேடி வருவார்கள் என்று திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version