சினிமா செய்திகள்

அட்லி-ஷாருக்கான் படத்தின் டைட்டில்: முக்கிய ஆவணத்தில் தகவல்!

Published

on

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் குறித்த முக்கிய ஆவணம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஹிந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரியாமணி நாயகிகளாக நடிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த முக்கிய ஆவணம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் உள்ள துக்காராம் நகர் என்ற மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு தாக்கல் செய்த விண்ணப்பம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆவணத்தில் இந்த படத்தின் டைட்டில் ’லயன்’ என்றும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பதாகவும் அந்த அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் திரைப்படத்திற்கு ’லயன்’ என்ற டைட்டில் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் படக்குழுவினர் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவரே நாயகன் மற்றும் வில்லன் வேடங்களை ஏற்று வருகிறார் என்பதும் ஷாருக்கானின் ஒரு கேரக்டருக்கு நயன்தாராவும் இன்னொரு கேரக்டருக்கு பிரியாமணியும் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் அவர் ஷாருக்கான் உடன் பயணம் செய்யும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version