சினிமா செய்திகள்

அட்லி-ஷாருக்கான் படம் டிராப் தான்: முட்டுக்கொடுக்கும் போலி ஊடகங்கள்!

Published

on

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் டிராப் என செய்திகள் வெளியான நிலையில் டிராப் இல்லை என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டு வரும் ஒரு சிலர் வதந்திகளைப் பரப்பி வருவதாக கோலிவுட் திரையுலகினர் தெரிவித்துள்ளனர் .

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் லயன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது உண்மைதான் என்றும், ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் மீது ஷாருக்கான் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது .

தற்போது ஷாருக்கான் வேறொரு படத்தில் பிசியாக இருக்கும் நிலையில் இதற்கு அடுத்ததாக இன்னொரு படத்தில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். எனவே அட்லியின் லயன் படத்தை இப்போதைக்கு டிராப் என்றுதான் ஷாருக்கான் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.

ஆனால் அவ்வப்போது போலி செய்திகளை கொடுத்து வரும் போலி ஊடகங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் டிராப் என்பதற்கு அட்லி மிகவும் மனவருத்தம் அடைந்து இருப்பதாகவும் வேண்டும் வதந்தியை பரப்பி வருவதாக கோலிவுட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version