சினிமா செய்திகள்
அதர்வாவின் “தள்ளிப் போகாதே” பட டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தெலுங்கில் வெளியாகி மக்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் நின்னு கோரி. அந்த படத்தை தமிழில் தள்ளிப் போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
தள்ளிப் போகாதே படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் நடித்துள்ளார்.
தெலுங்கு திரைப்படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தர், தள்ளிப் போகாதே படத்திற்கும் இடை அமைத்துள்ளார். இயக்குநர் கண்ணனே இந்த படத்தை எம்கேஆர்பி ப்ரோடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தள்ளிப் போகாதே படத்தின் டிரெய்லரை, இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் அக்டோபர் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூவர்மாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.