சினிமா செய்திகள்

அதர்வா நடித்த ‘தள்ளி போகாதே’: சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்!

Published

on

நடிகர் அதர்வா தற்போது ’தள்ளிப்போகாதே’ ’குருதி ஆட்டம்’ ’ஒத்தைக்கு ஒத்தை’ ’ருக்குமணி வண்டி வருது’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ’தள்ளிப்போகாதே’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சற்றுமுன் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டாலும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இந்த படத்தில் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோபிசுந்தர் இசையில் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவில் உருவாகிய இந்த படத்தின் திரைக்கதையை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அதர்வாவுக்கு திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version