சினிமா செய்திகள்
ஜிகர்தண்டா ரீமேக்கில் அதர்வா!
![NTLRG_160728100917000000 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/NTLRG_160728100917000000.jpg)
நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பூமராங் படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சித்தார்த் நடித்த இயக்குநர் கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். தேசிய விருது வென்ற பாபிசிம்ஹாவின் அசால்டு குமார் கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்கிறார். நாயகி லட்சுமி மேனன் ரோலில், மிருணாளினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில், பெரிய வெற்றிப் படங்கள் அமையாத நிலையில், அதர்வா தெலுங்கு பக்கம் தாவுகிறார்.