தொழில்நுட்பம்

அடேங்கப்பா.! ரோபோக்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.!

Published

on

விருந்தோம்பல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து, தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் ஹோட்டல் சேவையை உருவாகியுள்ளது. சீனாவில் உள்ள முன்னணி நிறுவனமான மேரியாட் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்த ஸ்மார்ட் LYZ ஹோட்டல் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் ஹோட்டலின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஹோட்டலில் மனிதர்களின் சேவையே கிடையாது. அனைத்துச் சேவைகளையும் ரோபோட்கள் தான் செய்து முடிக்கிறது. இதற்காகப் பிரத்தியேக ஏ.ஐ ரோபோட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் முழு கட்டுப்பாட்டையும் ரோபோட்கள் பக்குவமாக கவனித்துக்கொள்கிறது. செக் இன் மற்றும் செக் அவுட் செய்து பில் பணத்தைக் கணக்கிட்டு சொல்வதற்கும், ரூம் சர்வீஸ் செய்வதற்கும், உணவு தயாரிப்பதற்கும் மற்றும் அதனை உங்கள் ரூம் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் என்று அனைத்துச் சேவைகளையும் ரோபோட்கள் மட்டுமே செய்கிறது.

இந்த ஹோட்டலில் ரிசெப்ட்ஷன் டேபிள் கிடையாது, நடமாடும் ரோபோட் உங்கள் செக் இன் பதிவுகளை சரி பார்த்து உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு உங்களை அன்புடன் வரவேர்த்து அழைத்துச் செல்கிறது. உங்களைப் போட்டோ பிடித்து, உங்களின் ஐ.டி களை ஸ்கேன் செய்து, உங்கள் மொபைல் எண்களைச் சரிபார்த்துவிட்டு உங்கள் ரூமிற்க்கான கீ-கார்டை உடனே வழங்கிவிடுகிறது.

அறையின் ஏ.சி, லைட், டிவி, ஷவர் என அனைத்தும் தயாரிப்புகளும் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வசதியுடன் வருகிறது. சான்ஸ் கிடைச்ச சீனா போய் ஒருதடவை ட்ரை பனிப்பாருங்க ப்ரண்ட்ஸ்.

 

seithichurul

Trending

Exit mobile version