சினிமா

டிசம்பரில் ரிலீசாகிறது அடங்கமறு!

Published

on

ஜெயம் ரவியின் அடங்கமறு படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ரிலீசாகிறது.

கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்கமறு படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

அடங்கமறு படம் தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டிசம்பர் 21ஆம் தேதி படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான பேபி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் அடங்கமறு என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை பேபி படம் அள்ளியது போல, தமிழில் அடங்கமறு படமும் மாபெரும் வெற்றி படமாக மாறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version