வணிகம்

வங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பிலிருந்து வங்கி சேவையை மேம்படுத்த வேண்டும்.

மேலும் வங்கி கிளைகளில் குறைந்தது ஒருவர் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்.

வாடிக்கையாளர்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அது நிராகரிக்கப்பட்டால், வங்கிகள் பொதுவான காரணங்களைக் கூறாமல், ஏன் அவர்களால் அந்த கடனை பெற முடிவில்லை என்று முறையான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான உள்ளூர் பொதுத்துறை வங்கி கிளைகளில் வெளிமாநிலத்தவர்கள் அதிகளவில் உள்ளனர் என்று சர்ச்சைகள் உள்ளது. தற்போது நிர்மலா சீதாராமன் உள்ளூர் மொழிகள் தெரிந்த ஒருவர் வங்கி கிளைகளில் இருந்தால் போதும் என்று கூறியிருப்பது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில், வங்கிகளில் வெளிமாநிலத்தவர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டால் 6 மாதத்தில் உள்ளூர் மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விதியும் உள்ளது.

இது குறித்த உங்கள் கருத்துக்களை, இந்த செய்தியை பகிர்ந்து தெரிவியுங்கள்.

seithichurul

Trending

Exit mobile version