கிரிக்கெட்

IPL – ‘மும்பை இந்தியன்ஸ தட்டித் தூக்குறோம்!’- சவால்விடும் அஷ்வின்

Published

on

இன்று கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் கோலகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன.

சென்ற முறை கப் அடித்த மும்பை, இந்த முறையும் வலுவாக உள்ளதால் கோப்பையைக் கைப்பற்றும் என்று ஆருடம் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அதையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், ‘டெல்லி கேபிடல்ஸ் அணி இளம் கேப்டன் ரிஷப் பன்ட் தலைமையில் களமிறங்குவதால் ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி வலுவானதாக இருந்தாலும், வீழ்த்த முடியாத அணியெல்லாம் இல்லை. ஒவ்வொரு அணியும் வலுவாகத்தான் இருக்கிறார்கள். நான் சாதுர்யமாகப் பேசவில்லை. மும்பை அணி உண்மையில் வலிமையான அணிதான்; அனுபவமான வீரர்களைக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை.

தங்களின் முதல் போட்டியைக் கூட மும்பை அணி வெற்றியுடன் தொடங்கலாம். ஆனால், அதேசமயம், மும்பை அணி வெல்ல முடியாத அணியல்ல என்பதையும் சொல்கிறேன்.

இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவான சமநிலையுடன் வீரர்கள் இருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version