கிரிக்கெட்

அஸ்வின் மேஜிக்.. ஒரே ஓவரில் ஆஸியின் மாஸ் பார்ட்னர்ஷிப்பை உடைத்து.. வாவ் அடிதூள்

Published

on

அகமதாபாத்: இந்திய ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் அஸ்வின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் வெல்ல வேண்டும்.

இல்லையென்றால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். பிற அணி அணியை சார்ந்து இருப்பதற்கு பதிலாக நாமே வெல்வதே சிறப்பாக ருக்கும்.

ஆனால தற்போது 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். நேற்று முழு நாள் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில் இன்றும் ஆஸ்திரேலிய அணி நிதானமாக ரன் சேர்த்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா 165 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகிறார்.

இன்னொரு பக்கம் இன்று கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் -கேரி இருவரும் இன்று காலையில் இருந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் 130வது ஓவரில் அவர்கள் இருவரின் விக்கெட்டையும் அஸ்வின் எடுத்தார். இரண்டாவது பந்தில் கிரீனையும், கடைசி பந்தில் கேரியையும் விக்கெட் எடுத்து அஸ்வின் அசத்தினார். வலுவான பார்ட்னர்ஷிப்பை உடைத்த அஷ்வினால் ஆட்டம் கொஞ்சம் இந்திய அணி பக்கம் வந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version