தொழில்நுட்பம்

அசூஸ் ராக் கேமிங் போன் இந்தியாவில் அறிமுகம்.!

Published

on

இந்திய சந்தையில் நீண்ட நாட்களாக அதிகம் எதிர்பார்த்த Asus ROG Phone வரும் நவம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தும் ஒரு அம்சம் கேமிங் தான். அதற்கு தகுந்தபடி அசுஸ் நிறுவனம் இப்போது அருமையான கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்த கேமிங் ஸ்மார்ட்போன்னை டிவியுடன் இணைத்து பல்வேறு மொபைல் கேம்களை பதிவிறக்கம் செய்து நீங்கள் டிவியில் விளையாட முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

6’இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த  Asus ROG Phone 2160×1080 என்ற பிக்சல் திர்மானத்துடன் கூடிய கார்னிங் கொரில்லா கண்ணாடி அம்சத்துடன் களமிறங்கவுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

12 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் கொண்ட செல்பீ கேமராவுடன் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.96 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடன் கூடிய அண்ட்ராய்டு  8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்க கூடிய கேமிங் ஸ்மார்ட் phone இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை patriya விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version