இந்தியா

உலகிலேயே இதுதான் முதல்முறை: ஆசுஸ் லேப்டாப்பின் சிறப்பு

Published

on

உலகிலேயே முதன் முறையாக, 13.3 இன்ச் OLED Windows Detachable லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறோம் என ஆசுஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லேப்டாப் மற்றும் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசுஸ் நிறுவனம் கடந்த வாரம் ‘விவோபுக் 13 ஸ்லேட்’ என்ற புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்தது. இந்த லேப்டாப்பின் மானிட்டரை தனியாக பிரித்து, அதனை டேபுளட்டாக பயன்படுத்தலாம்.

இது குறித்து ஆசுஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘உலகிலேயே முதன் முறையாக, 13.3 இன்ச் OLED Windows Detachable லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறோம் என்றும், இந்த லேப்டாப் வாடிக்கையாளர்கள் எங்குவேண்டுமானாலும் எளிதாக எங்கும் எடுத்துசெல்லாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த லேப்டாப்பில் யூஎஸ்பி C போர்ட் உள்ளதால் 30 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும் என்ரும், ஒரு முறை சார்ஜ் செய்தால், 140 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 13.3 இன்ச் ஸ்கிரீன், 1920 x 1080 ரெசலூசன், 1,000,000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ, 0.0005 நிட்ஸ் டீப் பிளாக் பிரைட்னஸ், 50 வாட்ஸ் பேட்டரி ஆகியவை இந்த லேப்டாப்பின் சிறப்பம்சம்.

 

seithichurul

Trending

Exit mobile version