தொழில்நுட்பம்

அசுஸ் அறிமுகம் செய்த அட்டகாசமான கேமிங் லேப்டாப்.!

Published

on

அசுஸ் நிறுவனம் தனது கேமிங் லேப்டாப் சீரிஸ் வரிசையில் புதிய இரண்டு லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அசுஸ் நிறுவனம் தனது TUF சீரிஸ் வரிசையில் FX505 மற்றும் FX705 என்ற இரண்டு புது மாடல் கேமிங் லேப்டாப்களுடன் சேர்ந்து புதிய கேமிங் பி.சி (கம்ப்யூட்டர்) FX10CP மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அசுஸ் TUF சீரிஸ் கேமிங் லேப்டாப்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையில் கிடைக்குமென்றும் அசுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் TUF-FX10CP கேமிங் பி.சி ஆன்லைன் சந்தையில் கிடைக்காதென்றும், வெறும் ஆப்லைன் கடைகளில் மட்டுமே கிடைக்குமென்றும் அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசுஸ் TUF FX505 கேமிங் லேப்டாப் இந்தியாவில் ரூ.79,990 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்குமென்றும், அதேபோல் TUF-FX705 கேமிங் லேப்டாப் ரூ.1,24,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று அசுஸ் நிறுவனம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இத்துடன் அசுஸ் நிறுவனத்தின் புதிய TUF-FX10CP கேமிங் பி.சி ரூ.91,990 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version